CEO







Software Professional

Technical Consultant

Educational Consultant

Creative Director

Multimedia Animator

Vizualiser

Writer

Editor

Publisher

Journalist
காம்கேர் கே. புவனேஸ்வரி
CEO & MD
Compcare Software Private Limited
Chennai
நிறுவன மேலாளர்

சாஃப்ட்வேர் துறை வல்லுனர்

மல்டிமீடியா அனிமேஷன் தயாரிப்பாளர்

தொலைக்காட்சி -வானொலி நிகழ்ச்சி
தயாரிப்பாளர்

குறும்பட கிரியேடிவ் டைரக்டர்

புத்தக எழுத்தாளர்

புத்தக பதிப்பாளர்

சமூக ஆர்வலர்



இவர் M.Sc., Computer Science மற்றும் MBA பட்டங்கள் பெற்றவர்.
1992 - ம் ஆண்டில் இருந்து, சென்னையை தலைமை அலுவலகமாகக் கொண்டு இயங்கி வரும் Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர்  தயாரிப்பு நிறுவனத்தின் (Software  Development  Company - Since 1992) தலைமைச் செயலாளராகவும்  செயல்பட்டு வருகிறார்.
இவரது நிறுவனத்தில் வெப்சைட்டுக்களை வடிவமைத்தல், சாஃப்ட்வேர்கள்
மற்றும் மல்டிமீடியா அனிமேஷன் சி.டி.க்கள் தயாரித்தல், கல்வி-
இலக்கியம்-ஆன்மிகம் என பல்துறைச் சார்ந்த இ-புத்தகங்களை
உருவாக்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றின்
மூலம், இதுவரை ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை
வழங்கியுள்ளார்.
தொலைக்காட்சி வாயிலாக கம்ப்யூட்டர் பற்றிய நிகழ்ச்சிகளை நடத்தி
வருகிறார். முதாய விழிப்புணர்வுக்காகவும், கார்பரேட்
நிறுவனங்களுக்காகவும், தனிமனித வாழ்க்கை வரலாறு ம்பந்தமாகவும் 
ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களை தயாரித்து இயக்கி வருகிறார்.
தன் தொழில்நுட்ப கல்வியறிவினாலும், 20 வருட தொழில்
அனுபவத்தினாலும்  கிடைத்த  பரந்த அறிவாற்றல் மூலம், கம்ப்யூட்டர்
துறை சார்ந்த  சாஃப்ட்வேர், ஹார்டுவேர், இன்டர்நெட் ம்பந்தப்பட்ட
நூல்களை தமிழில் 50-க்கும் மேல் எழுதியுள்ளார். இவர் எழுதிய
புத்தகங்கள், பல பல்கலைக்கழகங்களைச் சார்ந்த கல்லூரிகளில்
பாடதிட்டங்களாக உள்ளன.
பல முன்னணி பத்திரிகைகளில் கம்ப்யூட்டர் பற்றிய தொடர் எழுதி
வருகிறார். கம்ப்யூட்டர் தவிர, குழந்தைகள்-பக்தி-இலக்கியம்-ஆன்மிகம்-
மனித வள மேம்பாடு ம்பந்தப்பட்ட விஷயங்களைக் எழுதுவதிலும்
வல்லுநராகத் திகழ்கிறார்.

நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அறிமுகம் ஆகத்தொடங்கிய 1992-களிலேயே தமிழையும் கம்ப்யூட்டரையும் இணைத்து, சாஃப்ட்வேர்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றதால், ‘தமிழையும் கம்ப்யூட்ய்டரையும் இணைத்த முதல் தொழில்நுட்ப வல்லுநர்’ என்ற விருதைப் பெற்றுள்ளார்.

தன் பெற்றோரின் பெயரில் இவர் நடத்திவரும்  ஸ்ரீபத்மகிருஷ்என்ற அறக்கட்டளை மூலம் குழந்தைகள்,  இளைஞர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு  சிறப்பு பட்டறை வகுப்புகளையும்கம்ப்யூட்டர் பயிற்சிகளையும் நடத்தி வருகிறார். மேலும், வருடந்தோறும் திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து ஸ்ரீபத்மகிருஷ் விருது அளித்து கெளரவிக்கிறார்.